வெளிநாடொன்றில் முற்றாக அழிந்த கிராமம் - ஒருவர் மட்டும் உயிர்பிழைத்த அதிசயம்
Sudan
Weather
World
Rain
By Thulsi
மேற்கு சூடானின் (Sudan) தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவலத்தில் ஒரே ஒருவர் மட்டும் தற்போது வரை உயிருடன் மீட்கப்பட்டதாக சூடான் விடுதலை இயக்கம் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீட்பு பணிகளுக்காக உதவி
மண்சரிவினால் அந்த கிராமம் இப்போது முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் உதவி கோரப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி