ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள் - எரிமலை வெடிக்கும் அபாய எச்சரிக்கை
ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதிகளில் 1600 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று(05) பலமுறைகள் ஏற்பட்ட இந்நில அதிர்வினால், எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதுவரையிலும், எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படாத போதிலும், ஓரிரண்டு நாட்களில் அது நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மஞ்சள் எச்சரிக்கை
அத்துடன், 1600 நில அதிர்வுகள் அளவிடப்பட்டுள்ள நிலையில், ரெய்க்ஜாவிக் பகுதியிலேயே அதிகம் உணரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்நிலைமை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை இடம்பெற்ற நில அதிர்வுகளில், நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்ததாகவும், இவை மிக லேசான நிலநடுக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்நாட்டில் விமானம் பறப்பதற்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.