ஜூலையில் இலங்கைக்கு வந்த 2 இலட்சத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள்
ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 6.6% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள்
அத்துடன் ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 37,128 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது 18.5% என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 பேரும், நெதர்லாந்திலிருந்து 15,556 பேரும், சீனாவிலிருந்து 12,982 பேரும், பிரான்சிலிருந்து 11,059 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,368,288 என பதிவாகியுள்ளது.
இவர்களில் 279,122 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 131,377 பேர் ரஷ்யாவிலிருந்தும், 115,470 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்ததாக இலங்கை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
