எத்தியோப்பியா நிலச்சரிவு: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வு
Ethiopia
Death
World
By Raghav
எத்தியோப்பியாவில் (Ethiopia) ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
உயிரிழப்பு எண்ணிக்கை
இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணிகள் எனப் பலர் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (23) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய (24) தினம் வெளியான தகவலின் படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
இதேவேளை அப்பகுதியில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி