பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஆய்வு! வெளியான அதிர்ச்சி தகவல்
பாக்கிஸ்தானில்(Pakistan) நடத்தப்பட்ட ஆய்வில் 40 சதவீத மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஆய்வினை கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அந்த ஆய்வு தொடர்பில் பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
சட்டவிரோத இடம்பெயர்வு
அந்த அறிக்கையில், “கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இங்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.
40 சதவீதம் பாகிஸ்தானியர்கள் இடம்பெயர விரும்புகிறார்கள். குறிப்பாக, பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பேர் இடம்பெயர விரும்புகிறார்கள்.
அந்தவகையில், எகிப்து, லிபியா மற்றும் துபாய் வழியே மக்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இடம்பெயர காரணம்
சமூக பாதுகாப்பு இல்லாமை, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் பயங்கரவாதம் ஆகியவை மக்கள் இடம்பெயர விரும்புவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
கடுமையான சிரமங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், சட்டவிரோத இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |