திசைகாட்டியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள்: வெளியாகவுள்ள அறிவிப்பு!
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினால் தெரிவுசெய்யப்படும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் இன்றையதினம் (17.11.2024) அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் (SriLanka) 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.
160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.
அதிக தேசியப்பட்டியல் ஆசனங்கள்
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு புதிய சாதனையை படைத்தது. மேலும் இந்த பொதுத் தேர்தலில் அதிக தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற சாதனையைும் தேசிய மக்கள் சக்தி நிகழ்த்தியுள்ளது.
அதன்படி தேசிய மக்கள் சக்தி 18 தேசிய பட்டியல் ஆசனங்களை தனதாக்கிக் கொண்டது. இந்நிலையில் இந்த 18 தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு அந்த கட்சியினால் தெரிவுசெய்யப்படும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் இன்றையதினம் (17.11.2024) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் கட்சிகளின் செயலாளர்களுக்கு நேற்றையதினம் (16.11.2024) அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |