பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வாகனம் அதிகாலை பறிமுதல்!
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரனிற்குச் சொந்தமான வாகனம் மற்றும் அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகள் என்பன வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, வாகனத்தில் பயணித்த உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13-06-2026) இடம்பெற்றுள்ளது.
சட்ட நடவடிக்கை
குறித்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நீண்டகாலமாகச் சுருக்கு வலை தொழிலாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டு அதற்கு எதிராகவும் நடந்துகொள்வது போன்று குரலெழுப்பி வந்த நிலையில்அதிகாலை வசமாக மாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாகச் சட்டவிரோத சுருக்கு வலை தொழில் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் கடற்படையினர் நேற்றும் இன்றும் கரையோரமாகத் தேடுதல் நடத்தி வந்தனர்.

குறித்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஆவார்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட வாகனம், சுருக்குவலை மற்றும் கைது செய்யப்பட்ட நபர் ஆகியோர் உரிய சட்ட நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

