தமிழரசுக் கட்சி: தேசியப் பட்டியல் கேட்டு அடம்பிடிக்கும் மாவை
‘மாற்றம்’ என்ற இலக்கை குறிவைத்து தென்னிலங்கை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின், ‘ஏமாற்றம்’ என்ற ஒன்றையே தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி.
புதிய நாடாளுமன்றத்துக்கான தேசியப் பட்டியல் நியமனம் யாருக்கு வழங்குவது என்கின்ற கேள்வி எழுந்தபோது, மூன்று பெயர்கள் முன்நிலைப்படுத்தபபட்டுவருகின்றன.
- மாவை சோனாதிராஜா (Mavai Senathirajah)
- பி.சத்தியலிங்கம்
- சுமந்திரன் (MA Sumanthiran)
தேசியப்பட்டியல் நிமனம் தனக்குத் தரவேண்டும் என்று மாவை சேனாதிராஜா கோரிவருகின்றார். தேசியப் பட்டியல் நியமனத்தைக் கோரி பல தூதுக்குழுக்களை பல்வேறு தரப்புக்களுக்கும் அவர் அனுப்பிவருவதாகத் தெரியவருகின்றது.
அதேவேளை, தமிழரசுக் கட்சியின் செயலாளர் பி.சத்தியலிங்கம் தேசியப் பட்டியல் தனக்குத்தான் தரப்படவேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபக்கம் சுமந்திரனுக்கே தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படவேண்டும் என்று கட்சியின் உள்ளே மற்றொரு அழுத்தம் வழங்கப்பட்டுவருகின்றது.
ஆக, தமிழ் மக்கள் விரும்பாத ஏதோ ஒரு தரப்புக்களுக்கு தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் செல்ல இருப்பது ஒறுதியாகின்றது.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
தமிழரசுக் கட்சி ஏற்கனவே வெளியிட்ட தேசியப் பட்டியலுக்கான விபரங்களில் இந்தப் பெயர்கள் எதுவும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்.
வேடிக்கை என்னவென்றால், தமிழசுக் கட்சி தயாரித்த தேசியப் பட்டியல் பெயர்விபரக் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் அனுப்பவேயில்லை என்று தற்பொழுது தெரியவந்துள்ளது. பட்டியலைத் தயாரித்து கடிதத் தலைப்பில், செயலாளர் சத்தியலிங்கம் கையொப்பம் இட்டு அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டனவே தவிர, அந்தக் கடிதத்தை அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவேயில்லையாம்.
தமிழரசுக் கட்சி என்றைக்குமே திருந்தமாட்டாது என்பதற்கு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தேசியப் பட்டியல் கூத்து ஒரு உதாரணம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |