கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள் பறிமுதல்:காவல்துறை தெரிவிப்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sindu
கடந்த இரண்டு வருடங்களில் 4,056 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
97 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு ஏகே-47 ரக தாக்குதல் துப்பாக்கி, 143 கைத்துப்பாக்கிகள், 105 சுழல் துப்பாக்கிகள் மற்றும் 397 12-போர் ஹொட் துப்பாக்கிகள் இதற்குள் அடங்கும்.
இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 596,591 சந்தேக நபர்களை உள்ளடக்கிய மொத்தம் 597,964 போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக 43,726 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ. 224 பில்லியன்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் 4,009 கிலோகிராம் ஹெரோயின், 6,526 கிலோகிராம் ஐஸ் மற்றும் 28,441 கிலோகிராம் கஞ்சா ஆகியவை அடங்கும்.

இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 224 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ராஜபக்சர்களின் உளவாளி என்ற எதிர்வினை: தமிழர்கள் கற்க வேண்டிய இஸ்ரேலின் வியூகங்கள் - நிராஜ் டேவிட் வெளிப்படை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி