விவசாய துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் : 911 விவசாயிகள் பதிவு
பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நாட்டின் தேசிய கொள்கையின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட அமைப்பான FarmerNET.lk இல் பதிவு செய்தோர் குறித்து விவசாய அபிவிருத்தி சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
அதன்படி, குறித்த அமைப்பில் இதுவரை 911 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் இப்போது இந்த சேவைக்கு நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என்று விவசாய அபிவிருத்தி சபை ஆணையாளர் நாயகம் சமிந்த ஏக்கநாயக்க (Chaminda Ekanayake) தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் தெரிவிப்பு
அதன்படி, இந்த அமைப்பு குறித்து விவசாயிகளுக்கு கற்பிப்பதற்கான ஒரு அடிப்படைத் திட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விவசாயத் துறைக்கு ஒரு விரிவான தேசிய தரவுத்தளத்தை நிறுவுவதே இந்த திட்டத்தின் முதன்மை குறிக்கோள் என்று விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) குறிப்பிட்டார்.
அத்துடன் டிஜிட்டல் தளத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து அனைத்து விவசாயிகளும் நன்கு அறிந்திருப்பதை நிகழ்ச்சி நிரலின் போது அதிகாரிகள் உறுதி செய்வார்கள் எனவும் சமிந்த ஏக்கநாயக்க வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |