யாழின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்று விளக்கம்! ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் புதிய நூல்
யாழ். மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்ததன் மூலம் மிக நீண்டகாலத்துக்கு முன்னரான சமூகம் மற்றும் பண்பாட்டை அடையாளம் காணமுடிந்திருப்பதாகத் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் புதிய நூலை வெளியிட்ட நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
பேராசிரியர் எஸ்.பத்மநாதனின் "Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna 300 BC–AD 500" கி.மு 300 - கி.பி 500 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பண்டைய நாகரிகம், சமுதாயம் மற்றும் கலாசாரம் குறித்த பார்வை' எனும் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த வார இறுதியில் (11) கொழும்பில் நடைபெற்றது.
எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு
பேராசிரியர் பத்மநாதனின் இந்த நூல் யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை, குறிப்பாக நாகர்களின் வரலாற்றைப் பற்றி மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் ஆராய்வதாக கூறப்படுகிறது.

தொல்பொருளியல் சான்றுகள் மற்றும் ஒப்பீட்டு வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் யாழ் மாவட்டத்துக்கே உரிய தனித்துவமான பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்த ஒரு சமூகம் பற்றிய கதையை வாசகர்களுக்குக் கூறுகிறது.
நிறைவாக நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பத்மநாதன், 'கடந்த 100 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கப்பெற்ற, இதுவரை பயன்படுத்தப்படாத வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்ததன் மூலம் மிக நீண்டகாலத்துக்கு முன்னர் நிலவிய சமூகம் மற்றும் பண்பாட்டை எம்மால் அடையாளம் காணமுடிந்துள்ளது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |