ஒரே நாளில் பிடிபட்ட ஐநூறு கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள்
Law and Order
Drugs
By Kanooshiya
தங்காலை பிரதேசத்தில் இன்று மூன்று லொரிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
அதன்படி, 245 கிலோகிராம் ஹெரோயின், 380 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களும் மீட்பு
குறித்த போதைப்பொருட்களுடன் 5 கைத்துப்பாக்கிகளும், ஒரு T-56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளன.
தங்காலை சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன.
இதேவேளை, குறித்த வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொரிகளில் இந்த போதைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
லொரியை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
