தியாகி முத்துக்குமாருக்கு வேலன் சுவாமிகள் இரங்கல்...! வெளியான அறிக்கை
தியாகி முத்துக்குமாரசுவாமியின் (குமார் அண்ணா) மறைவையொட்டி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை நேற்று (31-01-1026) வெளியிடப்பட்டுள்ளது.
இயக்கத்தின் தலைவர் அருட்பணி. ஜெசோப் மேரி மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
போராட்ட வரலாறு
குறித்த அறிக்கையில், முத்துக்குமாரசுவாமியின் நீண்டகாலப் போராட்ட வரலாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1968-இல் தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்தது முதல், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் 22 ஆண்டுகள் பணியாற்றி சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் நீதிக்காகக் குரல் கொடுத்தது வரை அவரது பங்களிப்புகள் மிக முக்கியமானவை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2009 போர்க்காலத்திலும், அதனைத் தொடர்ந்து தாயகத்தில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் போராட்டத்தின் போதும் அவர் வழங்கிய சர்வதேச ராஜதந்திர ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை அந்த அறிக்கையில் நினைவு கூறப்பட்டுள்ளது.
மேலும், அவரது மறைவு போராட்டத்தின் முடிவல்ல மாறாக அது நீதிக்கான பயணத்தைத் தீவிரப்படுத்தும் ஓர் அழைப்பு எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்