கடலுக்கு அடியில் நிகழும் பாரிய மாற்றம்... புவித்தகடுகளின் அசைவால் ஆபத்தில் ஜப்பான்
ஜப்பான், ஹவாய் தீவுகள் உட்பட மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் நிகழ்வதற்கு பொறுப்பாக இருக்கும் புவித்தகடு மேலும் விரிவடைந்து வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
பூமிக்கு அடியில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 15 புவித் தகடுகள் காணப்படுகின்றன, இவையே புவியில் இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்கு காரணியாகவும் விளங்குகின்றன.
இந்த 15 புவித்தகடுகளில் பெரியதாக விளங்கும் பசுபிக் தகடு தான் தற்போது விரிவடைந்துள்ளதாக டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பசுபிக் தகடு
இந்த பசுபிக் தகடு வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அலாஸ்கா வரையும், மேற்கே ஜப்பானில் இருந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா வரையும் நீண்டுள்ளது.
இந்த தகடு தான் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட காரணமாக இருக்கும் பசுபிக் ரிங் ஒப் பயருக்கும் காரணமாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
மேற்கு பசுபிக் பெருங்கடலில் ஹவாய், ஜப்பான், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா பகுதிகளில் ஆய்வாளர்களை இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வுகளில் 1970கள் முதல் எடுக்கப்பட்ட தரவுகளை கணனியில் உள்ளீடு செய்து முறைவழியாக்கியதன் மூலமாக இதுவரை வலிமையாக இருக்கும் என நம்பப்பட்ட புவித்தகடுகள் அதற்கு மாறாக லேசாக இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
பாரிய அனர்த்தங்கள்
மேலும் பசுபிக் தகடுகளில் ஏற்பட்டுள்ள இந்த விரிசலானது கடலுக்கு அடியில் பல நூறு கிலோமீட்டர் நீளத்திலும் பல ஆயிரம் கிமீ ஆழத்திலும் பல விரிசல்களாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு பசுபிக் பகுதியில் உள்ள புவித்தட்டுக்களின் சிறிய அசைவுகளே அங்கு பாரிய அனர்த்தங்களை விளைவிக்கின்ற வேளையில் பசுபிக் தகடுகளில் ஏற்பட்டுள்ள இந்த பெரிய விரிசல் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் ஆய்வாளர்கள் பீதியை கிளப்பியுள்ளனர்.
புவித் தகடுகளின் இந்த நகர்வின் தாக்கத்தால் ஜப்பானிலிருந்து நியூசிலாந்து வரையான பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக எச்சரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |