கனடாவில் இருந்து வந்த பொதி - அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பொதியை எவரும் பொறுப்பேற்க முன்வராததால் அதனை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
குறித்த பொதியில் ஆபத்தான ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
கனடாவிலிருந்து வந்த பொதி

கடந்த மே மாதம் மஹரகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு விலாசமிட்டு கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தப்பொதியை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த முகவரியை ஆய்வு செய்தபோது அந்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேகமடைந்த அதிகாரிகள்

இதனையடுத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாடு, காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இலங்கை தபால் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் பொதி இன்று (15) திறந்து பார்க்கப்பட்டது. அதில் நாய் உணவு அடங்கிய இரண்டு பொட்டலங்களிலும், பொம்மைகளுக்கு மத்தியிலும் ஆபத்தான போதைப்பொருளான ஹஷிஸ் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பொதியில் 670 கிராம் ஹசீஸ் இருந்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக பொதியை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
images -daily mirror





