ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு போலி முகவரிக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து பொதிகள் மூலமாக இலங்கைக்கு வந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
6 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் நேற்றைய தினம்(7) கைப்பற்றியுள்ளனர்.
இந்த 07 பொதிகளில் 08 கிலோ குஷ் என்ற கஞ்சா, 160 கிராம் மண்டி, 350 எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 08 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி பொதிகள்
இந்த பொதிகள் கொழும்பு பகுதியில் உள்ள பல போலி முகவரிகளுக்கு பொதி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
சுமார் 2 மாதங்களாக இந்த பார்சல்களின் உரிமையாளர்கள் எடுக்கப்படாததால், பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் போலியானது என தெரிய வந்ததுள்ளது.
இதனால் இந்த பொதிகளை திறந்து ஆய்வு செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருட்கள் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |