தமிழர்களின் வலிகளும் வேதனைகளும் ஓவியங்களாக வரையப்படவேண்டும்-கந்தையா பாஸ்கரன் கோரிக்கை
Jaffna
Baskaran Kandiah
By Jaso
எமது தேசத்தில் கடந்து வந்த வலிகளை ஓவியங்களாக வரையவேண்டுமென தொழிலதிபரும் சமுக செயற்பாட்டாளருமான கந்தையா பாஸ்கரன் ஓவியர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
சாவகச்சேரி மீசாலைச்சந்தியில் அமைந்துள்ள ஜானு ஆர்க் அக்கடமியின் வண்ணத் துகிலிகை கண்காட்சி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஓவியம் என்பது ஒரு நாட்டின் விடுதலையை கூட அடைய வைத்த ஏராளமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.அத்துடன் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் இந்த பூமிப்பந்தில் நடந்தேறியுள்ளன.
எங்களுடைய கடந்தகால சம்பவங்கள் எதிர்காலத்திற்கு கடத்தப்படவேண்டுமாக இருந்தால் ஓவியமும் அதற்கு பங்காற்றவேண்டி உள்ளது.ஏனெனில் ஓவியத்திற்கு எப்பொழுதும் அழிவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்