இந்திய வம்சாவளி சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் : இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இங்கிலாந்தின் வோல்வெர்காம்ப்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இருவர் குற்றவாளிகள் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்ன இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி சிறுவர்கள்
இந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 வயது சிறுவன் சஞ்சய் மற்றும் 2 வயது சிறுவன் பவான்வீர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.
அவர்களின் தாயார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முகம்மது சுலைமான்கான் (வயது 27) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதற்கமைய, கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் கடந்த வாரம் சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த வெஸ்ட் மிட்லாண்டு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளதுடன், அவர்களுக்கான தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.