பேருந்தும் -பாரவூர்தியும் மோதி கோரவிபத்து -30 பேர் பலி - பாகிஸ்தானில் துயரம்
accident
death
pakistan
By Sumithiran
பாகிஸ்தானில் பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்னர்.
பஞ்சாப் மாகணத்தில் உள்ள தேரா காசி கான் என்ற இடத்தில் பக்ரீத்தைக் கொண்டாட தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்தனர். அந்தப் பேருந்து சியால்கோட் என்ற இடத்திலிருந்து ராஜன்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அடுத்தடுத்து சிலர் மரணித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி