சொந்த நாட்டு மக்களையே குண்டுவீசி கொன்ற பாகிஸ்தான் விமானப்படை
பாகிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் துடிதுடித்து பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (22) அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிந்தது
பாகிஸ்தான் போர் விமானங்கள் 8 குண்டுகளை வீசித் தாக்கின. இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதுடன் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்திய இந்த பகுதி, ஆப்கன் எல்லையை ஒட்டிய மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம்
அண்மைய நாட்களாக ஆப்கான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சொந்த மக்கள் மீது விமானப்படை மூலம் வெடிகுண்டுகளை வீசியதற்கு பாகிஸ்தானுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
