ஆசிய கிண்ண தொடர் : பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ஓகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ரி2 முத்தரப்பு தொடர் மற்றும் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணிகளை பாகிஸ்தான் தேசிய தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஓகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7 வரை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
எட்டு அணிகள் கொண்ட ஏசிசி ஆசிய கோப்பை ரி20 போட்டி செப்டம்பர் 9 முதல் 28 வரை அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும். இந்தியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் பாகிஸ்தான் குழு 'ஏ'வில் இடம் பெற்றுள்ளது.
17 பேர் கொண்ட அணி:
சல்மான் அலி ஆகா (அணித்தலைவர்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் காப்பாளர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுஃப்யான் மோகிம்.
புறக்கணிக்கப்பட்ட முக்கிய இரு வீரர்கள்
பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ரி20 தொடரில் தொடர்ந்து சேர்க்கப்படவில்லை.
முத்தரப்பு தொடர் அட்டவணை (அனைத்து போட்டிகளும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில்):
ஓகஸ்ட் 29 - ஆப்கானிஸ்தான் v பாகிஸ்தான் - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி
ஓகஸ்ட் 30 - UAE v பாகிஸ்தான் - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி
செப்டம்பர் 1 - UAE v ஆப்கானிஸ்தான் - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி
செப்டம்பர் 2 - பாகிஸ்தான் v ஆப்கானிஸ்தான் - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி
செப்டம்பர் 4 - பாகிஸ்தான் v UAE - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி
செப்டம்பர் 5 - ஆப்கானிஸ்தான் v UAE - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி
செப்டம்பர் 7 - இறுதிப் போட்டி - உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

