போர்நிறுத்த புரிந்துணர்வு உடைக்கப்படும் போது பதிலடி கொடுப்போம் - இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடுமையான எச்சரிக்கை!
பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்ற ஜெனரல் சையத் அசிம் முனீர் , பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் காஷ்மீரில் (PoK) உள்ள ரக்சிக்ரி செக்டருக்கு விஜயம் செய்துள்ளார்.
அப்போது தங்கள் தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேரடியாகப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாகக் கூறி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் தீர்மானத்தை வலியுறுத்தும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த அறிக்கையை வெளியிட்டார் .
பதிலடி கொடுப்போம்
இந்திய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியின் சமீபத்திய அறிக்கையில் "இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை, இந்திய அரசாங்கம் எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அது நிறைவேற்றும். நாங்கள் அதற்கு எப்போதும் தயாராக இருப்போம்.
இரு நாடுகளின் நலன் கருதி போர்நிறுத்த புரிந்துணர்வு ஒருபோதும் உடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இராணுவம் அமைதியாக உள்ளது. ஆனால் எந்த நேரத்தில் அது உடைக்கப்படுகிறதோ, நாங்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்." என்று கூறியிருந்தார்.
நவம்பர் 24 அன்று, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி முனிரை ஜெனரல் பதவிக்கு உயர்த்தி, அவரை ராணுவ தளபதியாக (COAS) நியமித்தார். இந்நிலையை பதவி ஏற்ற ஒரு வாரத்தில் பாகிஸ்தானிய இராணுவத் தளபதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள அதிகாரிகளை சந்தித்தார்.
போரிற்கு தயார்
அங்கு வீரர்களுடன் உரையாடி, சவாலான சூழ்நிலையில் தங்கள் கடமைகளைச் செய்யும் அவர்களின் உயர் மன உறுதி, தொழில்முறை திறன் மற்றும் போர் தயார்நிலையைப் பாராட்டியுள்ளார். அப்போது இந்திய இராணுவ தளபதியின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக "சமீபத்தில் கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு பகுதிகள் மீது இந்திய செயல்பாடுகள் குறித்த பொறுப்பற்ற அறிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம்.
நான் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளன. எங்கள் தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பது மட்டுமல்லாமல், போர் என்று வந்தால் அதற்கும் தயாராக உள்ளோம்.
எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்று முனீர் கூறியுள்ளார்.
இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்ட நிலையில் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
