தடுப்பூசி போடாவிடின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும் - முடிவை அறிவித்தது பாகிஸ்தான்
covid
vaccine
pakistan
By Vanan
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசியே என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துவரும் சூழலில், ஒருசிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்கி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப்பில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்