பதற்றத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்..! பரபரப்பாகும் நாடாளுமன்ற தேர்தல்
இரட்டை குண்டுவெடிப்பு பதற்றத்தின் மத்தியில் பாகிஸ்தானில் இன்று(8) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் 16-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையத்தால் கடந்த டிசம்பா் 15-ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய காலை 8 மணிக்கு தொடங்கவிருக்கும் வாக்குப் பதிவானது இடைவேளை இல்லாமல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.
பொதுத் தோ்தல்
பாகிஸ்தானில் உள்ள 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு நிலையங்களில் நடைபெறும் இந்தத் தோ்தலில் வாக்களிக்க 12.85 கோடி போ் பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில் நேற்று(7) பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிஷின் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.
சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபாண்ட்யார் கான் கக்காரின் தேர்தல் அலுவலகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
இரட்டை குண்டுவெடிப்பு
இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள், கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள ஜாமியத்-உலேமா இஸ்லாம்-பாகிஸ்தான் கட்சி அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர் 22 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் அமைப்புகள் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்நிலையில், பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள சூழலில் இந்தத் தோ்தல் நடைபெறுவதால் நாடு முழுவதும் சுமாா் 6.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த முன்னாள் பிரதமா் இம்ரான் கான், ஊழல் மற்றும் ரகசியக் காப்புறுதி மீறல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
அவா் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தோ்தலில் பங்கேற்க முடியாது. இந்தத் தோ்தலில், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் கட்சி வெற்றி பெறும் என எதிர்பாா்க்கப்படுகிறது.
வரலாற்று சாதனை
நவாஸ் ஷெரீஃப்பின் கட்சி வெற்றிப்பெற்றால், நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் 4-ஆவது முறையாகப் பொறுப்பேற்பாா். இது ஒரு பாகிஸ்தான் வரலாற்றில் சாதனையாகும்.
நாடாளுமன்றத்தின் 336 இடங்களுக்கும் நடைபெறும் இந்தத் தோ்தலில் மொத்தம் 5,121 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 4,807 போ் ஆண்கள், 312 போ் பெண்கள், 2 போ் திருநங்கைகள் என்று பாகிஸ்தான் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |