முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுவிப்பு - கொண்டாடிய ஆதரவாளர்கள்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கும்படி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இருப்பினும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை காவல்துறைப் பாதுகாப்புடன் நீதிமன்றத்திலேயே இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்ரான் கானிடம் இன்னுமொரு விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
ஆதரவாளர்கள்
பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள், நீதிமன்ற உத்தரவைக் கேட்டுக் கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதான போது நாடெங்கும் கலவரங்கள் மூண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரின் ஆதரவாளர்கள் காவல்துறையினருடன் முதலில் ஈடுபட்டிருந்ததுடன், அதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி தெரிவிக்குமாறு இம்ரான் கானைத் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார்.
