இம்ரான்கானின் கட்சியினர் நடத்திய பேரணியில் குண்டுவெடிப்பு : பலர் பலி
பாகிஸ்தானில் இம்ரான் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து பலர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலரின் நிலை கவலைக்கிடம்
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
வெளியாகிய காணொளி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்த பேரணி நடைபெற்றது.
??? BOMB BLAST IN IMRAN KHAN PARTY RALLY
— GeoPolitics (@GeoPolitics52) January 30, 2024
A bomb blast in Pakistan Former PM Imran Khan election rally in Quetta...
Reports of injured & still no casualty...
Earlier today Court sentenced Imran Khan 10 years prison alon with former FM Shah Mehmood Qureshi...#Gaza #Hamas… pic.twitter.com/Vp9v0AZA2C
குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய காணொளி ஒன்றும் வெளிவந்துள்ளது. ஒரு பலத்த சத்தம் கேட்டதும் கட்சியினர் அலறும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. அந்நாட்டில்பெப்ரவரி 8-ம் திகதி பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்புடுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |