ஏவுகணையை கையிலெடுத்த பாகிஸ்தான்: ஆத்திரத்தில் இந்தியா - உச்சம் தொடும் பதற்றம்!
புதிய இணைப்பு
450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
அப்தாலி ஆயுத அமைப்பு (Abdali Weapon System) என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, பயிற்சி INDUS இன் ஒரு பகுதியாக ஏவப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
காஷமீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளமையானது இந்தியாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
🛑🛑🛑#Pakistan today conducted a successful training launch of the Abdali Weapon System— a surface-to-surface missile with a range of 450 kilometers as part of Ex INDUS
— Aniza Baloch (@aniza_balo58070) May 3, 2025
The launch was aimed at ensuring the operational readiness of troops and validating key technical parameters, pic.twitter.com/xdUbf6fDOX
முதலாம் இணைப்பு
காஷமீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.
தற்போதுள்ள பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றுமொரு காரியத்தை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்த முன்னாயத்தங்களை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
காஷமீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், இந்தியா நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தி நிற்கின்றன.
எனினும், அதற்கு மாறாக செயற்படும் பாகிஸ்தான், தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை சோதனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இதற்கான விண்வெளி எச்சரிக்கையும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கடல் எல்லை
இதேவேளை, கடந்த மாதம் 27 ஆம் திகதி மற்றும் 30 ஆம் திகதிகளிலும் குறித்த எச்சரிக்கை வெளியாகியிருந்ததாகவும், ஆனால் அது தொடர்பான எந்த ஏவுகணை சோதனைகளும் நடத்தப்படவில்லை என்றே இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணயில், இம்முறை ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள இடமானது, இந்திய கடல் எல்லைக்கு அருகில்தான் இருக்கின்றமையால் தற்போதுள்ள பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
