ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான்! தொடரும் பதற்ற சூழல்
பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் இன்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் அல்-அடில் என்ற அமைப்பை இலக்காக கொண்டு ஈரான் அரசு, ரொக்கெட் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் பலூசிஸ்தானில் நடந்த இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வான்வழி தாக்குதல்
இந்த சூழலில், ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் இன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதன்படி, ஈரானின் சப்பார் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
இதில், ஈரான் நாட்டு பகுதியில் அமைந்த பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த இந்த தாக்குதல் எதிரொலியாக ஈரானுக்கான தன்னுடைய தூதரை பாகிஸ்தான் திரும்ப அழைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.
சட்டவிரோத தாக்குதல்
ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப இருந்த ஈரான் தூதருக்கான அனுமதியையும் மறுத்தது. இது சட்டவிரோத தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்தது.
ஈரான், தன்னுடைய தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்பது புரிந்து கொள்ள முடிகிறது என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும், பாகிஸ்தான் மண்ணில் உள்ள ஈரான் பயங்கரவாதிகளையே நாங்கள் தாக்கினோம் என்று ஈரான் பதிலளித்தது.
இந்தநிலையில், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியமை தற்போது போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |