மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்
Missile
Pakistan
India
By Sumithiran
இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில்,நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்திய, பாகிஸ்தான் உறவு முற்றாக சீர்குலைந்துள்ளது.பாகிஸ்தான் இராணுவம் 'சிந்து போர் பயிற்சி' என்ற பெயரில் அப்தாலி என பெயரிடப்பட்ட ஏவுகணை சோதனையை நடத்தியது
முதல் நடந்த சோதனை
இந்த ஏவுகணை, 450 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. கராச்சி அருகே உள்ள சோன்மியானி ஏவுகணை தளத்தில் நடந்த இந்த சோதனை, வெற்றி அடைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்து இருந்தது.
2 வது முறையாக ஏவுகணை சோதனை
இந்நிலையில் இன்று (மே 05) 2 நாட்களில் 2 வது முறையாக ஏவுகணை சோதனை செய்துள்ளது.
120 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் பத்தா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்