இலங்கையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தானில் மௌன அஞ்சலி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண T20 கிரிக்கெட் தொடரில், இன்றைய (29.11.2025) இறுதிப் போட்டியில் இலங்கையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
முக்கோண T20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மௌன அஞ்சலி
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த மௌன அஞ்சலி செலுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

