இந்தியாவின் முடிவை தொடர்ந்து பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமை மோசமடைந்து வருவதால், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது.
போட்டியின் மீதமுள்ள எட்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று அந்த அமைப்பு கூறிய ஒரு நாள் கழித்து PSL ஐ நிறுத்தி வைப்பதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
எனினும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தமது நாட்டில் நடத்துவதற்கு பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்க ஐக்கிய அரபு இராச்சியம் மறுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் அறிவிப்பு
முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL) போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்த மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
இதேவேளை, போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றிருந்த வெளிநாடுகளின் வீரர்கள் சொந்த நாடுகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்
நிலைமை மோசமடைவதன் காரணமாக பிசிசிஐ கூட்டமொன்றை நடத்திய நிலையில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
