பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு!
hospital
death
attack
Pakistan
terrorist
By Thavathevan
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்று மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 22 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் தப்பி செல்லாமல் இருக்க அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்