பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ODI தொடரின் இறுதிப் போட்டி!
சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று (16.11.2025) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி இன்று (16.11.2025) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர்
ராவல்பிண்டியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலை அடுத்து நாடு திரும்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை வீரர்கள் இருந்தனர்.

எனினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அளித்த பாதுகாப்பு உத்தரவாதம், அரச பிரதிநிதிகளுக்குரிய அதியுச்ச பாதுகாப்பு இலங்கை அணியினருக்கு வழங்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய உத்தரவாதம் ஆகியவற்றைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் அங்கு தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை, இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்களால் மிக மோசமாக தோல்வியடைந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |