கனடாவில் தரையிறங்கிய விமானம் : காணாமல் போன பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கனடாவில் தரையிறங்கிய நிலையில் அந்த விமானத்தில் பணியாற்றிய "மர்யம் ராசா" (Maryam Raza) என்ற பெண்மணி காணாமல் போயுள்ளார்.
இந்த விமானம் பெப்ரவரி 26 ஆம் திகதி டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில்
அந்த விமானத்தில் பணியாற்றிய மர்யம் ராசா, விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார். மறுநாள் விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டிய மர்யம், பணிக்கு வரவில்லை.
நன்றி பிஐஏ
இதையடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அதிகாரிகள் அவரை தேடினர். முறையான காவல்துறை அனுமதி பெற்று மர்யம் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்து போது அங்கு, மர்யம் ராசாவின் விமான பணிப்பெண் சீருடையையும், "நன்றி பிஐஏ" (Thank You, PIA) எனும் குறிப்பையும் அவர் விட்டுச் சென்றது தெரிய வந்தது.
சுமார் 15 வருடங்கள் பிஐஏ-வில் பணியாற்றியவர் மர்யம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |