சாந்தனின் பூதவுடலுக்கு சீமான் அஞ்சலி
சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரது பூதவுடல் இன்று (29) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாந்தனின் பூதவுடலுக்கு சீமான் அஞ்சலி
இந்த நிலையில், சாந்தனின் பூதவுடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல்
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) February 28, 2024
பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண… pic.twitter.com/ddiqn3fuW5
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |