வலுக்கும் பதற்றம் : பாகிஸ்தான் இராணுவ வீரரை கைது செய்தது இந்திய இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா(india) பாகிஸ்தான் (pakistan)இடையேயான முறுகல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
எப்போது போர் மூளும் என்ற பதற்றத்தில் இருநாட்டு மக்களும் கலங்கிப்போய் உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த நபர் ராஜஸ்தான் பகுதிக்கு உட்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் உள்ளார். அவரின் அடையாளம் குறித்து இந்திய படையினர் எந்த தகவலும் அளிக்கவில்லை.
இந்திய இராணுவ வீரர் கைதுக்கு பின்னர் நடந்த சம்பவம்
பஹல்காம் தாக்குதலுக்கு மறுநாள் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவின் கடும் கண்டனத்திற்கு பிறகும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய பாதுகாப்புப்படை வீரரை விடுவிக்க மறுத்துள்ளது.
இந்திய இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்த நிலையில் இருநாட்டினைச் சேர்நத ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய பாதுகாப்புப்படையினர் ரோந்து பணியின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் எல்லையை கடந்து செல்ல வேண்டாம் என்றும் எல்லைப்பாதுகாப்புப்படை அறிவுறுத்தியுள்ளது.
