அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசுக்கு பறந்த கோரிக்கை
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 50 ஆயிரம் ரூபா வரை உயர்த்துமாறு அநுர அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
விலைவாசி உயர்வின் காரணமாக வழங்கப்படும் சம்பளம் செலவுகளைச் சமாளித்துக் கொள்ள போதுமானதாக இல்லாததால் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தொழிற்சங்க நடவடிக்கை
கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போது 24,250 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளம், 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அதற்காக 15,750 ரூபா சம்பள அதிகரிப்பும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய விலைவாசி உயர்வின் காரணமாக இந்தச் சம்பளம் செலவுகளைச் சமாளித்துக் கொள்ளப் போதுமானதாக இல்லாத காரணத்தினால், அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சமாக 50 ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்றும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
