மீண்டும் குறி வைக்கப்பட்ட ட்ரம்ப்: அமெரிக்க உளவுத்துறையிடம் சிக்கிய ஈரான் உளவாளி
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியியதாக கூறப்படும் ஈரான் (Iran) உளவாளி ஒருவரை அமெரிக்க (USA) உளவுத்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கூலிப்படை போல் நடித்த காவல் அதிகாரிகளிடம் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற அணுகிய போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கொலை
குறித்த நபர், பாகிஸ்தானில் (Pakistan) இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஈரான் சென்று வந்துள்ளதாகவும், இதன்போது, அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆவணங்களைத் திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ தளபதி
இந்த நிலையில், ஈரானின் இராணுவ தளபதி காசிம் சுலைமானி (Qasem Soleimani) கடந்த 2020 ஆம் ஆண்டு ஈராக் சென்றபோது அவரை அமெரிக்கா கொலை செய்தமைக்கு பதிலடியாக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த ஈரானிய உளவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படாத போதிலும் சில முக்கிய ஆதாரங்களின்படி ட்ரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |