அமெரிக்கத் தேர்தல்: துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த கமலா ஹாரிஸ்
எதிர்வரும் அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris), அக்கட்சியின் துணை வேட்பாளரை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண ஆளுநராக பணியாற்றும் டிம் வால்ஸை (Tim Walz) அவர் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜோ பைடனுக்கு (Joe Biden) பதிலாக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.
முற்போக்கான அணுகுமுறை
இந்தநிலையில், கமலா ஹாரிசுடன் இணைவதை தாம் பெருமையாக கருதுவதாக டிம் வால்ஸ் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.
It is the honor of a lifetime to join @kamalaharris in this campaign.
— Tim Walz (@Tim_Walz) August 6, 2024
I’m all in.
Vice President Harris is showing us the politics of what’s possible. It reminds me a bit of the first day of school.
So, let’s get this done, folks! Join us. https://t.co/tqOVsw2OLM
மேலும், அவரது முற்போக்கான அணுகுமுறை பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |