ஹனியே படுகொலை: ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு
இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு தனது புதிய தலைவரை அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் (Irael) மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவராக கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் (Iran) கடந்த 31 ஆம் திகதி கொல்லப்பட்டார்.
ஈரானின் எச்சரிக்கை
ஈரான் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது ஏவுகணை தாக்குதலில் இஸ்மாயில் கொல்லப்பட்டார்.
குறித்த தாக்குதலானது, இஸ்ரேலால் நடத்தப்பட்டது என்றும் இதற்கு பதலடி வழங்கப்படும் எனவும் ஈரான் தொடர்ந்தும் எச்சரித்து வருகிறது.
புதிய தலைவர்
இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியேவின் மரணத்தை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் படி, ஹமாஸ் அமைப்பின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த யாஹ்யா சின்வார், தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |