கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு
பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஜூலை 29ம் திகதி பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் அக்சல் ருடகுபனா என்ற 17 வயதுடைய சிறுவன் நடத்திய பயங்கர தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டில் கலவரங்கள் வெடித்தன.
இந்த நிலையில், அதிதீவிர வலதுசாரிகள் பிரித்தானியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட பேரணி கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்நாட்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கோப்ரா கூட்டம்
குறித்த பேரணிகள் தீவிர வலதுசாரி பேரணிகளின் பெரிய நாளாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதன் படி, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் மீண்டும் இன்று இரவு கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்த அவசர கூட்டத்திற்கு அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்துக கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர சூழ்நிலை
கோப்ரா என்பது உள்நாட்டு அமைதியின்மை, வெள்ளம் போன்ற அவசர சூழ்நிலைகளை கையாளுவதற்கு அழைக்கப்படும் ஒரு கூட்டமாகும்.(Cabinet Office Briefing Room A)
எவ்வாறாயினும், நேற்றையதினமும் கலவரங்களை கட்டுபடுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கூட்டத்தை கூட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |