சுனித்தா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம்: நாசா எடுத்துள்ள தீர்மானம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூன்றாவது முறையாகப் பயணம் மேற்கொண்ட நாசாவின் (NASA) விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunitha Williams) பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், இந்திய வம்சாவளியானரான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர் கடந்த மே 05ஆம் திகதி போயிங் ஸ்டார்லைனர் ரொக்கெட் மூலம் விண்வெளிக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்
அதன்படி, குறித்த இருவரும் திட்டமிட்டபடி கடந்த மே 22ஆம் திகதி பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். எனினும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்குத் திரும்புவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்புவதில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்திலேயே தங்கியுள்ள நிலையில் அவர்கள் பூமிக்குத் திரும்பும் திகதி இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
இந்த நிலையில், அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner) விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
மேலும், எதிர்வரும் 18ஆம் திகதி “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |