பிரித்தானியா செல்லும் இந்திய பயணிகளுக்கு வெளியான எச்சரிக்கை
பிரித்தானியாவில் (UK) மூன்று சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடித்த கலவரங்களானது, தற்போது இரண்டாவது வாரமாகவும் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் (India) இருந்து பிரித்தானியாவுக்கு செல்லும் மக்களுக்கு இந்திய தூதரகம் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.
அதன் படி, இது தொடர்பில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் (London) உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் (X) தளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கான பயணம்
அதில், "பிரித்தானியாவில் சில பகுதிகளில் நடந்து வரும் சமீபத்திய போராட்டங்கள் குறித்து இந்திய பயணிகள் அறிந்திருக்கக் கூடும். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்தியாவில் இருந்து வருபவர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யும்போது விழிப்புடன் இருக்கவும், கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்ளூர் செய்திகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்கள் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுவதும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்ப்பதும் நல்லது." என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 14 மணி நேரம் முன்
