கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல் நங்கூரமிட்டது
பாகிஸ்தான்(pakistan) கடற்படைக் கப்பலான ‘PNS ASLAT’ இன்று (பெப்ரவரி 01, 2025) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, மேலும் சிறிலங்கா கடற்படை, கடற்படை மரபுகளின்படி அந்தக் கப்பலை வரவேற்றது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'PNS ASLAT' என்ற ஃப்ரிகேட் (FFG) வகைக் கப்பல் 123 மீட்டர் நீளமும் 243 தொன் மொத்த எடையும் கொண்டது. இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் முஹம்மது அசார் அக்ரம் ஆவார்.
முக்கியமான இடங்களை பார்வையிட திட்டம்
மேலும், 'PNS ASLAT' கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் பெப்ரவரி 4, 2025 அன்று நாட்டிலிருந்து புறப்பட்டு, அதன் அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளது.
மேலும், சிறிலங்கா கடற்படையுடன் மேற்கு கடற்படை கட்டளை கடற்பரப்பில் ஒரு கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |