உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதி விடுவிப்பு (படங்கள்)

release jaffna airport road
By Vanan Jan 19, 2022 02:31 PM GMT
Report

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியின் விடுவிக்கப்படாமலிருந்த 400 மீற்றர் வீதியின் சர்ச்சை தற்போது ஓரளவு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வீதியை விடுவிப்பது தொடர்பாக கடந்த நல்லாட்சி காலத்தில் பலரால் முயற்சியெடுக்கப்பட்டும் அது கைகூடாத நிலையில் காணப்பட்டது.

இருப்பினும், ஆட்சி மாற்றத்தின் பின்னராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனும், முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகமும், இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

மேலும், கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், அங்கஜன் இராமநாதன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் இவ்வீதி விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்தார்.

அதன்போது அரச தலைவர் இவ்விடயத்தை ஆராயுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கோரியிருந்தார்.

இதன்பலனாக இவ்வீதியின் கிழக்குப் பகுதியில் இருந்த இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் முட்கம்பி வேலி பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளதுடன், வேலிக்குள் உள்ள வீதி விடுவிக்கப்படுவதுடன் அங்கு தற்போது இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினரால் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய பாதுகாப்பு நிலமைகளை ஆராய்ந்ததன் அடிப்படையில், குறித்த பகுதியில் 6 மீற்றர் தூரத்துக்கு பாதுகாப்பு வேலியை நகர்த்துவதன் ஊடாக, விடுவிக்கப்படும் 400 மீற்றர் நீளமான நிலப்பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் இருந்த வீதியைப் போல தற்போது முழுமையாக விடுவிப்பதற்கு 25 மீற்றர் பின்நகர்த்தவேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர்.

ஆனால் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டால் தற்போதைய நிலையில் இதற்கு சாத்தியமில்லாத தன்மையே அங்கு காணப்படுகின்றது.

அதாவது, கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் சர்ச்சைக்குள்ள பகுதியின் கிழக்குப் புறமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்புறமாக விமானப்படையின் முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்னால் விமான நிலையத்தின் சுற்று மண் அணை உள்ளது. இவ்வாறான நிலையில் 25 மீற்றர் தூரத்துக்கு வேலியை பின்நகர்த்துவதாயின் விமான நிலைய மண் அணை உள்ள பகுதியிலேயே வேலி நகர்த்த வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனையின் அடிப்படையில் இவ்விடயம் சாத்தியப்படாத நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 6 மீற்றர் வரை பாதுகாப்பு வேலையை பின்நகர்த்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 400 மீற்றர் வீதியானது புனரமைக்கப்பட்டு, விமான நிலையத்துக்கு தற்போது செல்வதற்காக பாவிக்கப்படும் காப்பெற் வீதியுடன் இணைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


GalleryGallery
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024