இஸ்ரேலிய விமான தாக்குதலில் குடும்பத்துடன் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் (படங்கள்)
Israel-Hamas War
Gaza
By Sumithiran
இஸ்ரேலிய விமான தாக்குதலில் பாலஸ்தீன தொலைக்காட்சியின் மூத்த நிருபரான முகமது அபு ஹதாப் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டார்.
வெள்ளிக்கிழமை இரவு தெற்கு காசாவின் கான் யூனிஸில் அமைந்திருந்த ஊடகவியலாளரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் பலி
சம்பவத்தில் ஊடகவியலாளரின் மனைவி,மகன் மற்றும் சகோதரர் என நால்வர் கொல்லப்பட்டனர்.
31 வது பாலஸ்தீன பத்திரிகையாளர் படுகொலை
இதேவேளை பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் (CPJ) கருத்துப்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா மீதான இஸ்ரேலியப் போரின் தொடக்கத்திலிருந்து கொல்லப்பட்ட 31 வது பாலஸ்தீன பத்திரிகையாளர் அபு ஹத்தாப் ஆவார் என தெரிவித்துள்ளது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்