ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும்: பாலித பெருமிதம்
ஐக்கிய தேசியக் கட்சி மீண்டெழுந்துவிட்டதாகவும் அக்கட்சியின் பலம் என்னவென்பது அடுத்த தேர்தலில் தெரியவருமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர்.
அரசியல் ஆட்டம்
மே தினத்தில் அவர்கள் மேடையேறுவார்கள் என நாம் கூறவில்லை அடுத்துவரும் நாட்களில்தான் அவர்கள் வருவார்கள் எனவே இனித்தான் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும்.
விழுந்துவிட்டது எனக் கூறப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எழுந்துவிட்டது அத்தோடு எமது பலம் என்னவென்பது அடுத்துவரும் நாட்களிலும் மற்றும் அதிபர் தேர்தலிலும் தெரியவரும்.
சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) அதிபர் தேர்தலுக்கு வருவாரென நம்பவில்லை அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியில் தலைமைத்துவப் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட கரு ஜயசூரியவைப்(Karu Jayasuriya) பலிகடாவாக்கிவிட்டு சஜித் பிரேமதாஸ தப்பித்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |