பாக்கு நீரிணையில் சீனப் பெருஞ் சுவர்..! சீனாவுக்கு சிக்கலாகும் வடக்கு மாகாணம்
சிறிலங்காவில் சீனா வலுவாக கால்பதித்து 'பாக்கு நீரிணையில் சீனப் பெருஞ் சுவர்' ஒன்றை உருவாக்க முயல்கின்றது என்கிறார் பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சீனா தெற்கிலே வலுவாக காலூன்றி விட்டது. தற்போது வடக்கு - கிழக்கில் கால்பதிப்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
வடக்கு மாகாணம் தான் சீனாவுக்கு பிரச்சினையாக இருக்கும். வடக்கிலே கிளர்ச்சிகள் அல்லது போராட்டங்கள் இடம்பெற்றால் சீனாவால் நிலைபெற முடியாது.
சீனா வகுக்கப்போகும் திட்டங்கள்
ஆகவே வடக்கு மக்களை ஆதரிப்பது அல்லது வடக்கு மக்களுடைய பண்பாட்டியல்களோடு சேர்ந்து நல்லூர் ஆலயத்திற்கு செல்வதும், வேட்டி கட்டி வலம் வருவதும் அவர்களது வழக்கமாக இருக்கிறது.
ஏனென்றால் தமிழர்களுடன் அவர்கள் அந்நியோன்யமாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவே இவ்வாறு செயல்படுகிறார்கள்.
இவ்வாறான நகர்வுகள் மூலம், சீனப் பெருஞ்சுவர் ஒன்று உருவாக்குவதற்கான திட்டங்களைத் தான் அவர்கள் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகள் தான் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என அவர் கூறினார்.
சிறிலங்காவின் அரசியலில் அண்மைய காலமாக இந்தியாவினுடைய நிலைப்பாடு, தமிழர் தரப்பின் அரசியல் இருப்பு - குழறுபடிகள், வட பகுதியில் இருந்து சீனா வகுக்கப்போகும் திட்டங்கள் என அவர் கூறும் விடயங்களை காணாளியில் காண்க,