யாழ். அராலி வீதியோரத்தில் ஆபத்தான நிலையில் பனைமரம் - உயிர் அச்சத்தில் பயணிகள்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
அராலி பாலத்தடியில் இருந்து அராலி அம்மன் கோவிலுக்கு செல்லும் 789 பேருந்து வழித்தட வீதியில் பனைமரம் ஒன்று ஆபத்தான முறையில் காணப்படுவதால் மக்கள் உயிர் அச்சத்தின் மத்திய போக்குவரத்தில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
வீதியோரத்தில் நிற்கும் குறித்த பனைமரத்தை இனந்தெரியாதவர்கள் அரைகுறையாக வெட்டிய நிலையில் அந்த பனைமரம் முறிந்து விழும் அபாயத்தில் காணப்படுகின்றது.
குறித்த வீதியால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஆபத்தான நிலை அங்கு காணப்படுகின்றது.
எனவே உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஆபத்துகளை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி