பாம்பன் பாலம் திறக்கப்படும் திகதி : வெளியான அறிவிப்பு
பாம்பன் (Pamban Bridge) புதிய தொடருந்து பாலம் திறக்கப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் ஆறாம் திகதி ராமநவமியன்று பாலம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு, திறப்பு விழாவில் பிரதமர் மோடி (Narendra Modi) பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு தொடருந்து திணைக்களத்தின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பப் பிரச்சினைகள்
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தொடருந்து தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே 2019 மார்ச் முதலாம் திகதி புதிய தொடருந்து பாலத்தின் அடிக்கல்லை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாட்டினார்.
535 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகளை கடந்த நவம்பர் மாதம் தொடருந்து தஜணைக்களத்தின் பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வுசெய்து, சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, அவர் சுட்டிக்காட்டிய பணிகள் சரி செய்யப்பட்டன.
இந்தநிலையில், பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான பணிகளை தெற்கு தொடருந்து திணைக்களம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், இராமேஸ்வரம் தொடருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள், பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை தெற்கு தொடருந்து திணைக்கள பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு அழைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் ஆம் திகதி ராமநவமியன்று பாம்பன் புதிய தொடருந்து பாலத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திறப்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
மேலும், அன்று இராமேஸ்வரத்திலிருந்து புதிய தொடருந்து சேவையைத் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.
விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் இதற்காக இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே விழாவுக்கான மேடை அமைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
